கபடவேடதாரி – ஓர் அறிமுகம்

மீண்டும் ஒரு நாவலுக்குள் வாழத் தொடங்குகிறேன். எனக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாது. எழுதுவது. அல்லது எழுதுவதைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பது. நினைத்துக்கொண்டிருக்கும் நாள்களில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். எழுதத் தொடங்கிவிட்டால் வேறு ஒருவனாகிவிடுகிறேன். இப்போது தொடங்கியிருக்கும் இந்நாவல் எனக்குச் சிறிது வினோதமானது. ஏனென்றால் இரண்டு முறை இதனை எழுத ஆரம்பித்துப் பாதியில் நிறுத்தியிருக்கிறேன். இரண்டு முறை ஆரம்பிப்பதோ நிறுத்துவதோ பெரிதல்ல. இரண்டு முறையும் வேறு வேறு வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட மொழி நடை. முதல் முறை … Continue reading கபடவேடதாரி – ஓர் அறிமுகம்